சுகாதார சீர்கேடு

Update: 2024-12-29 16:45 GMT

தர்மபுரி-ஓசூர் நெடுஞ்சாலையில் வெள்ளிசந்தை உள்ளது. இந்த பகுதி சாலையோரங்களில் மூட்டை, மூட்டையாக கோழி கழிவுகள், குப்பைகள், ஓட்டல் கழிவுகள் ஆகியவற்றை கொட்டி செல்கின்றனர். இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் மழைக்காலம் என்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இங்கு குப்பை கழிவுகள் கொட்டப்படுவதை தடுத்து நிறுத்த அதிகாரிகள் முன் வர வேண்டும்.

-முருகன், வெள்ளி சந்தை.

மேலும் செய்திகள்