கோத்தகிரி அருகே நடுஹட்டி ஊராட்சி பெட்டட்டி பகுதியில் சாலையோரத்தில் குப்ைபகள் குவிந்து கிடக்கிறது. அங்கு குப்பைகளை முறையாக அகற்றுவது இல்லை. தற்போது மழை பெய்து வருவதால், அந்த குப்ைபகளில் இருந்து கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் நோய் தொற்று பரவும் அபாயம் காணப்படுகிறது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே குப்பைகளை முறையாக அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.