தர்மபுரி அருகே குள்ளனூர் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் மேற்கு கரையோர பகுதியில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுகின்றன. இந்தப் பகுதியின் அருகிலேயே தார்சாலை அமைந்திருப்பதால் சாலைக்கும் குப்பைகள் பரவுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுவதை தடுக்க குப்பைகள் கொட்டுவதை தவிர்க்க வேண்டும். அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் தொட்டிகள் அமைத்து குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும்.
-கணேசன், தர்மபுரி.