திருச்சி மாவட்டம் முசிறி கடைவீதியில் சஞ்சீவி ராயன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு முன்பு உள்ள சாலையில் பொதுமக்கள் சிலர் குப்பைகளை கொட்டுகின்றனா். இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் இந்த குப்பைகளிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாவதால் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.