தருமபுரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கேசவன்புதூரில் இருந்து பிள்ளையார்புரத்துக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதர சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும், கழிவுகளை உட்கொள்ள தெருநாய்கள் சுற்றுகின்றன. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையோரத்தில் உள்ள குப்பைகளை அகற்றுவதுடன், அங்கு குப்பைகளை கொட்டுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்தாஸ், சந்தையடி.