பழனி அடிவாரம் மதனபுறம் பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பைகள் வாழையிலை கழிவுகள் குவிந்து கிடக்கிறது. தற்போது சபரிமலை சீசன் என்பதால் வெளியூர் பக்தர்கள் அதிகமாக பழனிக்கு வருகின்றனர். ஆனால் குப்பைகள் அகற்றாமல் குவிந்து கிடப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. எனவே கோவில் மற்றும் நகராட்சி நிர்வாகம் இணைந்து குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.