கோவையை அடுத்த கொண்டையம்பாளையம், வரதய்யங்கார்பாளையம் ஆகிய கிராமங்களில் குப்பைகளை பொது இடங்களில் கொட்டிவிட்டு செல்கின்றனர். குறிப்பாக கால்வாய்களில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அங்கு நீரோட்டம் தடைபட்டு, கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தி அதிகரிப்பதோடு கடும் துர்நாற்றமும் வீசுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கால்வாய்களை தூர்வாருவதோடு குப்பைகளை அகற்ற வேண்டும். மேலும் ஆங்காங்கே குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும்.