கூடலூர் செவிடிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலர் குடியிருப்புக்கு செல்லும் சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுகிறது. தூய்மை பணியாளர்கள் வீடு, வீடாக நேரில் சென்று குப்பைகளை வாங்கும் நிலையில், இப்படி பொது இடத்தில் குப்பைகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் திறந்த வெளியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கொட்டப்பட்டு உள்ள உடனடியாக குப்பைகளை அகற்ற வேண்டும்.