
மணக்குடியில் இருந்து பள்ளம் செல்லும் கடற்கரை சாலையோரத்தில் நீண்ட காலமாக குப்பைகள் கொட்டி எரிக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், புகைமண்டலம் சூழ்ந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு குப்பைகளை கொட்டுவதையும், தீவைத்து எரிப்பதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வகுமார், தென்தாமரைகுளம்.