கடலூர் அருகே திருவந்திபுரத்தில் கெடிலம் ஆற்றங்கரையோரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதில் பன்றிகள் மேய்வதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றுவதோடு, அங்கு சுகாதார பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.