குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2024-12-08 14:48 GMT
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்திலிருந்து கோட்டப்பாளையம் செல்லும் குறுக்கு சாலையில் மாராடி ஏரியின் வடக்கு கரைப்பகுதியில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசி வருதால் சாலைகளில் செல்வோர் மூக்கை பிடித்து செல்கின்றனர். தற்போது மழை பெய்து வருதால் குப்பைகளில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும், இந்த குப்பைகள் அனைத்தும் சில நேரங்களில் மொத்தமாக எரிக்கப்படுகிறது. இதனால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. எனவே குப்பைகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்