இடுவாய் ஊராட்சிக்குட்பட்ட பாரதிபுரம் 4 -வது வீதியில் அங்கனவாடி மையம் அருகில் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு மலை போல் குவிந்து காணப்படுகிறது. இந்த குப்பைகளை முறையாக அகற்றாததால் சுகாதார சீர்கேடு எற்படுகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே அந்த குப்பைகளை முறையாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ஆல்வின், திருப்பூர்.