கோவை மாநகராட்சி 27-வது வார்டு சின்னவேடம்பட்டி அத்திப்பாளையம் சாலை பகுதியில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதன் காரணமாக அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் மழை பெய்து வருவதால் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்.