கிருஷ்ணகிரியில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பிரசித்தி பெற்ற காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் அருகில் தேசிய நெடுஞ்சாலை இணைய கூடிய பகுதியில் சாலையோரத்தில், ஏராளமான குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலையில் அவ்வழியாக செல்லும் பொதுமக்களும், கோவிலுக்கு வந்து செல்ல கூடிய பக்தர்களும் இவ்வழியாக செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே தேசிய நெடுஞ்சாலையோரத்தில் குப்பைகளை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆனந்த், கிருஷ்ணகிரி.