சுகாதார சீர்கேடு

Update: 2024-12-01 17:03 GMT

பர்கூர் பேரூராட்சி 14-வது வார்டு ஹவுசிங் போர்டு, மல்லப்பாடி ஊராட்சி 9-வது வார்டு மேல் வெங்கடாபுரம் ஆகிய இரு பகுதிகளிலும் உள்ள குடியிருப்பு வாசிகள் வெங்கடாபுரம் செல்லும் சாலையோரம் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் இப்பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் இந்த பகுதியில் கொட்டப்படும் குப்பை கழிவுகளை அகற்றி மீண்டும் குப்பைகள் கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

-மணி, பர்கூர்.

மேலும் செய்திகள்