இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு

Update: 2024-12-01 13:50 GMT
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே வண்ணாங்குன்டு பகுதியில் கோழி இறைச்சி கழிவுகள் சாலையின் ஒரமாக கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் அதிக துர்நாற்றம் வீசுகிறது. மேலும் வண்ணாங்குன்டு பகுதி பத்திரதரவை செல்லும் சாலையின் முன்பு பல நாட்களாக கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் டெங்கு, மலேரியா, போன்ற தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்பகுதி மக்கள் நலனை கருத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்