குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2024-12-01 13:32 GMT

திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு, பெருமாள்பட்டு கிராமத்தில் உள்ள சக்தி நகர் பகுதியில் 50-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த பகுதியில் உள்ள காலி இடத்தில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் பயங்கர துர்நாற்றம் வீசுவதுடன், கொசு தொல்லையும் அதிகரித்துள்ளது. மழை காலங்களில் நிலை இன்னும் மோசமாகி விடுகிறது. மேலும் புதர் போல் செடிகள் வளர்ந்து இருப்பதால் விஷப்பூச்சிகள் வீட்டுக்குள் வரும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குப்பைகளை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்