கூடலூர் கோழிப்பாலம் அரசு மாணவ-மாணவிகள் விடுதிகள் உள்ள பகுதிகளில் நகராட்சி குழாய்கள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இவற்றில் பெரும்பாலான இடங்களில் குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாக தெருக்களில் வழிந்து ஓடுகிறது. மேலும் அளவுக்கு அதிகமாக குடிநீர் செல்வதால் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் பழுதடைந்த குழாய்களை சீரமைக்க அதிகாரிகள் ஆவன வேண்டும்.