விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி மருதுபாண்டியர் நகர் ஓடைப்பகுதியில் தற்போது பெய்து வரும் மழையால் குப்பைகள் அங்கேங்கே தேங்கி கிடைக்கின்றன. இதனால் அப்பகுதியில் அதிக துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்களின் உற்பத்தியாகிநோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.