சென்னை துறைமுகம், கொத்தவால்சாவடி பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளது. இந்த பகுதியில் மாநகராட்சி சார்பில் வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் மட்டும் குப்பைகள் அகற்றப்படுகிறது. இந்த பகுதியில் கல்லூரி மற்றும் பள்ளிகள் இருப்பதால் இந்த வழியாக செல்லும் மாணவ-மாணவியர் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். மேலும், நாளுக்கு நாள் சாலை ஆக்கிரமிப்பும் அதிகரித்து போக்குவரது நெரிசலும் ஏற்படுகிறது. எனேவ, தினமும் இந்த பகுயில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.