கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட 3-வது வார்டு அஞ்சுகம் நகரில் தண்ணீர் தொட்டி அருகே சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றுவதோடு மீண்டும் குப்பைகள் கொட்டாமல் தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.