சுகாதார சீர்கேடு

Update: 2026-11-22 17:07 GMT

சிவகங்கை மாவட்டம் காளையர்கோவில் பகுதியில் உள்ள சாலைகளின் ஓரங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் அதிக அளவில் தேங்கி கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் குப்பையின் துர்நாற்றத்தால் இந்த பகுதி மக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். குப்பைகளை கால்நடைகள் இழுத்து வந்து சாலையில் போட்டுச்செல்கின்றன. பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் தேங்கி கிடக்கும் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்த முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்