நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளக்கள்பட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்நிலையில் நாமகிரிப்பேட்டை-வெள்ளக்கல்பட்டி வழியாக புதுப்பட்டி செல்லும் சாலையோரம் குப்பைகளை எரிக்கின்றனர். இதனால் மாணவர்கள் மூச்சு விட சிரமப்படுகின்றனர். இதனை சரிசெய்ய அதிகாரிகள் முன்வருவார்களா?