வேலூர் மாநகராட்சி மண்டலம் 1-க்கு உட்பட்ட தாராபடவேடு 7-வது வார்டில் பவானி நகர் பகுதியில் முத்து மாரியம்மன் கோவில் அருகில் மயானம் மற்றும் எரிவாயு தகனமேடை அமைந்துள்ளது. மயானம் போதுமான இடமில்லாமல் சிறிய அளவில் உள்ளது. இந்த மயானத்தில் குப்பைகளை கொண்டு வந்து கொட்டி குவித்து வைத்துள்ளனர். இந்தக் குப்பை குவியலால் மயானத்தில் அடக்கம் மற்றும் தகனம் செய்ப வருபவர்கள் நிற்க முடியாத அளவில் துர்நாற்றம் வீசுகிறது. மயானத்தில் குப்பைகள் கொட்டுவதை மாநகராட்சி நிர்வாகம் தடுக்க வேண்டும்.
-பி. துரை, செங்குட்டை, தாராபடவேடு, காட்பாடி.