கரூர் மாவட்டம், சுக்காலியூர் அமராவதி ஆற்றுப்பாலம் அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையோரம் பிளாஸ்டிக் பைகள் மற்றும் கழிவுப்பொருட்கள் மூட்டைகளாக குவிக்கப்பட்டுள்ளன. ஈரப்பதம் காரணமாக அவற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதால், அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்கின்றனர். எனவே, சாலையோரம் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.