திமிரி-நம்பரை சாலையில் பத்மநாப முதலி தெரு கோடியில் ஏரிக்கரை உள்ளது. பேரூராட்சியில் உள்ள கோழி இறைச்சி கடைகளில் கழிவுகளை ஏரிக்கரையோரமும், ஏரியின் உள்ளேயும் கொட்டுகிறார்கள். அந்தக் கோழி கழிவுகளால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியாக நம்பரை, துர்கம், முள்ளன்டிரம், வில்வநாதபுரம், 12:புத்தூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் மக்களுக்கு சிரமமாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கோழி இறைச்சி கழிவுகளை கொட்ட தடை விதிக்க வேண்டும்.
-சிவசண்முகம், திமிரி.