கலவை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 7-வது வார்டு பகுதியில் கலவைபுத்தூர் சாலை ஓரத்தில் குப்பைகள், கோழி இறைச்சி கழிவுகள் ஆகியவற்றை வீசுகிறார்கள். துப்புரவு பணியாளர்கள் தினமும் கலவை முழுவதும் குப்பைகளை முறையாக சேகரித்து அவற்றை வாழைப்பந்தல் சாலையில் உள்ள திடக்கழிவு மேலாண்மை நிலையத்துக்கு கொண்டு சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தரம் பிரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வெற்றிவேல், கலவை.