ஏரியூரில் பிரதான கடைவீதியில் நியாய விலைக் கடை மற்றும் பஸ் நிலையம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் நீண்ட நாட்களாக குப்பை தொட்டிகள் நிரம்பி குப்பைகள் அள்ளப்படாமல் உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் முகம் சுழித்த படி செல்கின்றனர். எனவே இந்த பகுதியில் குப்பை தொட்டிகளில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணிகண்டன், மலையனூர்.