இறச்சக்குளம் அருகே பேச்சாங்குளம்-ஜீவாநகர் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் விவசாய நிலத்திற்கு தண்ணீர் செல்லும் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி தண்ணீர் செல்ல முடியாத நிலையில் காணப்படுகிறது. மேலும், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கால்வாயில் தேங்கி கிடக்கும் கழிவுகளை அகற்றிட வேண்டும்.
-முருகன், பூதப்பாண்டி.