நெல்லை கோடீஸ்வரன்நகர் 6-வது குறுக்கு தெருவில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. அங்குள்ள குப்பைத்தொட்டி சேதமடைந்து சரிந்து கிடக்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைத்தொட்டியை சீரமைத்து, குப்பைகளை தினமும் முறையாக அகற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.