குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2024-10-27 07:51 GMT

குளச்சல் நகராட்சிக்கு சொந்தமாக சிறுவர் பூங்கா உள்ளது. இந்த பூங்காவின் முன்புறம் ஏ.வி.எம். கால்வாய் பாய்கிறது. மாலை நேரங்களில் குளச்சல் பகுதியில் உள்ள பெண்கள், சிறுவர்கள் இந்த பூங்காவிற்கு வந்து பொழுதை போக்கிவிட்டு செல்வது வழக்கம். தற்போது இந்த கால்வாயில் சிறுவர் பூங்கா பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் தேங்கி காணப்படுகிறது. இதனால், அந்த அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வருவதாக பூங்காவுக்கு வரும் பெண்கள், குழந்தைகள் பெரும் நிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், கால்வாய்யில் தேங்கி கிடக்கும் குப்பைகளால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பூங்கா பகுதியில் கால்வாயில் தேங்கி கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றிட வேண்டும்.

-அமீன், குளச்சல்.

மேலும் செய்திகள்