செஞ்சி-திண்டிவனம் சாலையில் உள்ள சங்கராபரணி ஆற்றுப்பாலத்தில் குப்பைகள் அதிகளவு கொட்டப்பட்டு குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.