சென்னை கோடம்பாக்கம், டிரஸ்ட்புரம் 4-வது தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த தெரு ஓரத்தில் சிலர் குப்பைகளை கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால் பயங்கர துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் குப்பை கொட்டவோ, சீறுநீர் கழிக்கவோ கூடாது என பெயர் பலகை அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.