புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள செம்பட்டி விடுதி ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் மண்டலார் வகை சுடுகாட்டில் கொட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த குப்பைகளுக்கு தீ வைக்கப்படுவதால் இப்பகுதியில் உள்ள குழந்தைகள், முதியவர்கள் முச்சு திணறலால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.