நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2024-08-18 11:18 GMT

சென்னை கிண்டி, அண்ணா பல்கலைகழகம் எதிரில் உள்ள வனப்பகுதில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இங்கு வசிக்கும் மான் போன்ற சில காட்டு விலங்குகள் அந்த குப்பை குவியலில் கிடக்கும் பொருள்களை உண்கின்றன. குப்பையில் கிடக்கும் பிளாஸ்டிக் நெகிழி போன்றவற்றை உண்டு விலங்குகள் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும். மேலும், அந்த பகுதியில் குப்பை கொட்டுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்