சென்னை பாடி, கழிவுநீர் அகற்றும் வாரிய சுற்றுப்புறத்தில் குப்பை தொட்டிகள் உள்ளது. அந்த குப்பை தொட்டிகள் நிரம்பி வழிவதால், அந்த பகுதி மக்கள் குப்பைகளை சாலையிலேயே கொட்டி செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் அதிக அளவு துர்நாற்றம் வீசுகிறது. எனவே குப்பை தொட்டிகள் நிரம்பியதும் குப்பைகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.