சுகாதார சீர்கேடு

Update: 2024-07-28 18:11 GMT
உளுந்தூர்பேட்டை அருகே பொியகுறுக்கை காலனி பகுதியில் மினி குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் மினிகுடிநீர் தொட்டியை சுற்றி தண்ணீர் தேங்கி பாசிபடர்ந்து சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அப்பகுதியை சுத்தப்படுத்தி சுகாதார பணியை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்