உளுந்தூர்பேட்டை தாலுகா எலவனாசூர்கோட்டையில் இருந்து ஆசனூர் செல்லும் சர்வீஸ் சாலையோரத்தில் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கின்றன. இந்த குப்பைகளுக்கு அடிக்கடி தீ வைத்து எரிக்கப்படுவதால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதோடு, பொதுமக்களுக்கு கண் எரிச்சல், சுவாசக்கோளாறு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?