குப்பைதொட்டி இடமாற்றப்படுமா?

Update: 2024-06-16 13:27 GMT

சென்னை கோடம்பாக்கம், டிரஸ்ட்புரம் 4-வது தெருவில் குடியிருப்பு பகுதியில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. சிலர் குப்பை தொட்டிகளில் குப்பைகளை போடாமல் கீழே போட்டுவிட்டு செல்கின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சிலர் குப்பைதொட்டி அருகே சிறுநீர் கழிப்பதால் பெண்கள் அந்த வழியாக செல்ல முடியவில்லை. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் குப்பை தொட்டியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்