வாய்க்காலில் தேங்கும் குப்பைகள்

Update: 2024-06-16 11:30 GMT

அரியலூர்-எருத்துக்காரன்பட்டி செல்லும் சாலையில் உள்ள கழிவுநீர் வாய்க்கால் முழுவதும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால், கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. மேலும் அப்பகுதியில் உள்ள மாடு, தெருநாய்கள், பன்றிகள் உள்ளிட்டவை குப்பைகளை கிளறி வருவதால், அவை சாலையில் பறந்து வருகின்றன. மேலும் அவ்வழியாக செல்பவர்கள் கடும் துர்நாற்றம் காரணமாக தங்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் சூழல் நிலவி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கழிவுநீர் வாய்க்காலை மீட்டமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்