சுகாதார சீர்கேடு

Update: 2024-06-09 17:50 GMT

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே கொண்டமநாயக்கன்பட்டி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையோரங்களில் குப்பைகளை கொட்ட கூடாது என்று ஊராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெயராம், கொண்டமநாயக்கன்பட்டி.

மேலும் செய்திகள்