அரியலூரில் இருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு செல்லும் சாலையோரம் குப்பைகள் குவியலாக கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த குப்பைகளில் நாய் மற்றும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் மேய்வதாலும், அவை குப்பைகளை கிளறி விடுவதாலும் சாலையின் நடுவே குப்பைகள் சேர்கிறது. மேலும் இந்த குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசி வருவதால், அந்த வழியாக செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதியடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.