பொதுமக்கள் அவதி

Update: 2024-06-09 10:46 GMT

திருவள்ளூர் மாவட்டம், காரனோடையில் மீன் மார்கெட் ஒன்று உள்ளது. இங்கு மீன் வாங்க தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் அந்த பகுதிகளில் மீன் கழிவுகள் சாலைகளில் கொட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் பயங்கர துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மூக்கை மூடிக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் மிகவும் அவதி அடைகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுகளை அப்புறப்படுத்தவும், கழிவுகள் சாலையில் கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்