சுகாதார சீர்கேடு

Update: 2024-05-26 11:43 GMT

அரியலூர்-செந்துறை சாலையானது அரியலூரின் முக்கிய பகுதியாகும். இங்கு அரசு மருத்துவமனை, கடைகள், வீடுகள் பல உள்ளன. இந்நிலையில், இந்த சாலையோரம் கழிவுநீர் செல்லும் வகையில் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வடிகால் முறையாக பராமரிக்கப்படாததால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குப்பைகளை வடிகாலில் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து நாளிதழ்களில் பலமுறை செய்தி வெளிவந்துள்ளது. இருந்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சுகாதார சீர்கேடை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்