கோவையை அடுத்த வெள்ளக்கிணறு பகுதியில் இருந்து சமத்துவபுரம் செல்லும் சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. தற்போது மழை பெய்து வருவதால், அந்த குப்பையில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் அவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் காணப்படுகிறது. எனவே அந்த குப்பை குவியலை அகற்றவும், மீண்டும் கொட்டாமல் தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.