காஞ்சீபுரம் மாவட்டம், மாங்காடு பட்டூர் சந்திரா நகரில் உள்ள சாலையில் குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதி வழியே செல்லும் போது அதிக அளவு துர்நாற்றம் வீசுகிறது. மேலும், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பை கொட்டுவதை தவிர்க்கவும், அங்குள்ள குப்பைகளை உடனடியாக அகற்றவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?