திண்டுக்கல் மாநகராட்சி 14-வது வார்டு பகுதியில் சாலையோரத்தில் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் காற்றில் குப்பைகள் பறப்பதால், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். எனவே உடனடியாக குப்பைகளை அகற்ற வேண்டும்.