குப்பை தொட்டி இடம் மாற்றப்படுமா?

Update: 2024-05-12 13:54 GMT

சென்னை கீழ்பாக்கம், கோவில் தெருவில் மாநகராட்சி சார்பில் குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது அந்த குப்பை தொட்டியானது, சாலையை ஒட்டியவாறு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியே செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகிறது. மேலும், அந்த பகுதி வழியாக செல்லும் பொதுமக்களுக்கும் இடையூறாகவும் உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் குப்பை தொட்டியை மாற்று இடத்தில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்