இறைச்சி கழிவுகள்

Update: 2024-04-28 12:02 GMT

கூடலூர் தலைமை தபால் நிலையம் அருகே ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் பள்ளம் ஒன்று உள்ளது. இந்த பள்ளத்தில் கோழி இறைச்சி கழிவுகள் வீசப்படுகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்பவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. மேலும் சிறுத்தை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. எனவே அங்கு இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்