குட்டையில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும்

Update: 2024-04-28 10:33 GMT

குட்டையில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும்

பல்லடம் அருகே உள்ள பணிக்கம்பட்டி ஊராட்சி எலந்த குட்டை பல்லடம் - செட்டிபாளையம் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. மழை காலங்களில் இந்த குளத்தில் நீர் தேங்கி நிற்கும். இதன் மூலம் அருகே உள்ள விவசாய நிலங்களில் நிலத்தடி நீர் உயர்வதற்கு வழிவகுக்கும். இந்த நிலையில், சிலர் குட்டையில் கட்டிடக்கழிவுகள், மருத்துவ கழிவுகள், குப்பைகள் போன்றவற்றை இரவு நேரங்களில் வந்து கொட்டி விட்டுச் சென்று விடுகின்றனர். எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து குட்டையில் குப்பைகளை கொட்டுவதை தடுக்க வேண்டும்.

மயில்வாகனம்,பணிக்கம்பட்டி.

7874673637

மேலும் செய்திகள்